கரூர் மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: 15 பதவிக்கு 65 பேர் மனு தாக்கல்

மாவட்டத்தில் காலியாக உள்ள 15 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு 65 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்

Update: 2021-09-22 18:15 GMT

கரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சியில் காலியாக உள்ள 15 பதவிகளுக்காக 65 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி களுக்கான தேர்தலின் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகறுக்கான தேர்தல் வரும் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கரூர் மாவட்டத்தில் உள்ள ஊரக உள்ளாட்சிகளில் காலியாக உள்ள 15 பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை ஒரு மாவட்ட ஊராட்சி உறுப்பினர், ஒரு ஒன்றிய குழு உறுப்பினர், ஒரு ஊராட்சி தலைவர், 12 ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் அக்டோபர் மாதம் 9ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தக்கல் இன்றுடன் முடிவுற்றது. இதில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் கண்ணையன் அதிமுக சார்பில் என் முத்துக்குமாரும், நாம் தமிழர் கட்சி சார்பில் சுசிலா, தேமுதிக சார்பில் ராமசாமி ஆகியோர் போட்டியிடுகின்றனர். மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு மொத்தம் 22 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதேபோல, கரூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 15 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு மொத்தம் 65 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.


Tags:    

Similar News