முன்னாள் அமைச்சர் வீடு, தொழிற்சாலையில் லஞ்ச ஒழிப்பு சோதனை நிறைவு

14 மணி நேர சோதனையில் ரூ .25,56,000 / - மற்றும் சொத்து சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள் , முதலீடுகள் கைப்பற்றப்பட்டது.

Update: 2021-07-22 17:00 GMT

கரூரில் போக்குவரத்துத் துறை முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு சொந்தமான சாயப்பட்டறையில் லஞ்ச ஒழிப்பு போலீசார்  சோதனை நடத்தி விட்டு வெளியேறும் காட்சி.

கரூரில், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு, அவரது தம்பி வீடு மற்றும் உதவியாளர்கள் வீடு என 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் இன்று காலை 7 மணி முதல் மேற்கொண்ட அதிரடி சோதனை 14 மணி நேரத்திற்கு பிறகு நிறைவடைந்துள்ளது

முன்னாள் எம் ஆர் விஜயபாஸ்கர் அவரது பெயரிலும், அவரது மனைவி விஜயலட்சுமி, அவரது சகோதரர் சேகர் ஆகியோர் பெயரிலும் மற்றும் அவர் பங்குதாரராக உள்ள நிறுவனங்கள் பெயரிலும், அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்துள்ளதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக அவரது  உறவினர்கள் உள்ளிட்ட  26 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினர் இன்று சோதனை  மேற்கொண்டனர். 14 மணி நேர சோதனையில் ரூ .25,56,000 / - மற்றும் சொத்து சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள் , காப்பீட்டு நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள் மற்றும் நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்க கைப்பற்றப்பட்டன .

இதில் கரூரில் உள்ள அமைச்சரின் தம்பி சேகர் வீட்டில் மட்டும் ரூ. 16 லட்சமும், சென்னை மற்றும் பிற இடங்களில் 96000 கைப்பற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து கரூரில் 14 மணி நேரம் நடைபெற்று வந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நிறைவு பெற்றது.

Tags:    

Similar News