கரூர் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு அளித்த ஊழியர்கள்

கரூரில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் பணியாற்றிய பணியாளர்கள் பணி வழங்கக்கோரி ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு அளித்தனர்.

Update: 2022-03-14 12:31 GMT

 கரூர் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு அளித்த பணியாளர்கள்.

கடந்த 2020 ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று காலத்தில் கோவிட் வார்டுகளில் பணியாற்ற மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வக நுட்பனர்கள், பன்னோக்கு பணியாளர்கள் என ஆயிரக் கணக்கானோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் என அடிப்படையில் தமிழக அரசு நியமனம் செய்தது.

இந்த நிலையில் உயிரையும் பொருட்படுத்தாது கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி பல தொற்றுக்கு ஆளாகி மட்டுமன்றி உயிரிழந்துள்ளனர். இவ்வாறு பணியாற்றிய வருவோருக்கு துவக்கத்தில் முறையாக ஊதியம் வழங்கி நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் டிசம்பர் மாதம் முதல் பணி, வழங்காமல் உள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட பணியாளர்கள் கரூர் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு அளித்தனர். கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பன்னோக்கு பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட எங்களை தொடர்ந்து பணிபுரியவும், 3 மாத ஊதியம் மற்றும் பிடித்தம் செய்யப்பட்ட ஊதியத்தை வழங்க வேண்டும் என்று கண்ணீர் மல்க மனு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News