கரூரில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் இடங்கள்

கரூர் பழைய மருத்துவமனை, வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனை, குளித்தலை அரசு மருத்துவமனையில் 24 மணிநேரமும் தடுப்பூசி செலுத்தலாம்.

Update: 2021-09-18 06:00 GMT

பைல் படம்.

கரூர் மாவட்டத்தில், கரூர் நகராட்சிக்குட்பட்ட பழைய அரசு மருத்துவமனை, வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனை, குளித்தலை தலைமை மருத்துவமனை ஆகிய இடங்களில் 24 மணி நேரமும் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்படுகிறது.

மாவட்டம் முழுவதும் மற்ற இடங்களில் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் வருமாறு :

செல்லிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, வேலாயுதம் பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மணவாடி அரசு நடுநிலைப்பள்ளி, ஆண்டான் கோவில் புதூர் அங்கன்வாடி மையம், நடுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, முளையாண்டிபட்டி நடுநிலைப்பள்ளி, கோவிலூர் மினி கிளினிக், லிங்கமநாயக்கன்பட்டி ஹாஜியார் மகால் ஆகிய இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

Tags:    

Similar News