கரூர் கலெக்டர் பிரபுசங்கர் தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை

கரூரில் 73-வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் பிரபுசங்கர் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்

Update: 2022-01-26 10:00 GMT

குடியரசு தின விழாவில் காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்ளும் கலெக்டர் பிரபு சங்கர் 

இந்தியத் திருநாட்டின் 73-வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு கரூர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் பிரபுசங்கர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

பின்னர் அனைவரிடமும் சமத்துவம் நிலவும் வகையில் சமாதானப் புறாக்களையும், தேசிய கொடி வண்ணத்திலான பலூன்களையும் பறக்கவிட்டார். அரசின் வழிகாட்டி நெறிமுறைகளின்படி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் முன்னிலை வகித்தார்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் கொரோனா கட்டுப்பாடு பணிகள், முன்கள பணிகள், அலுவலக பணிகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள், மருத்துவர்கள், காவல்துறை அலுவலர்கள், வருவாய்த் துறை மற்றும் வளர்ச்சித் துறை அலுவலர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளை சார்ந்த நபர்களை பாராட்டி நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கி கௌரவித்தார்.

அதனைத் தொடர்ந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துற, சமூக பாதுகாப்புத் திட்டம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை என பல துறைகள் மூலம் மொத்தம் 62 பயனாளிகளுக்கு ரூ.48,57,970 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

Tags:    

Similar News