நாட்டுபுறக் கலைஞர்கள் நிதியுதவி பெற கலெக்டர் அழைப்பு

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பங்களை வரும் 15-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் சென்னை தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்திற்கு நேரிலும் அளிக்கலாம்.

Update: 2022-03-12 13:15 GMT

மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர்.

இதுகுறித்து கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தொன்மை சிறப்பு மிக்க தமிழக கிராமியக் கலைகளைப் போற்றி வளர்க்கும் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், இசைக் கருவிகள், ஆடை மற்றும் அணிகலன்கள் வாங்கிட தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற கலைஞர்கள் பயன்பெறும் வகையில் நபர் ஒருவருக்கு ரூ.10,000- வீதம் 500 கலைஞர்களுக்கு, தமிழ்நாடு இயல், இசை நாடக மன்றம் மூலம் நிதியுதவி வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் கலைஞர்கள் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்றவராகவும், பதிவினை புதுப் பித்தவராகவும் இருத்தல் வேண்டும். தனிப்பட்ட கலைஞரின் வயது வரும் 31-ம்  தேதியன்று 18 ஆண்டுகள் நிரம்பியதாகவும், 60 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். விண்ணப்பப் படிவங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றது. அஞ்சல் மூலம் விண்ணப்பம் பெற விரும்பும் கலைஞர்கள், கலைக் குழுக்கள் சுயமுகவரியிட்ட உறையில் ரூ.10க்கான அஞ்சல் தலை ஒட்டி செயலாளர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், 31, பொன்னி, பி.எஸ் குமாரசாமி ராஜா சாலை, சென்னை- 600 028 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.

மேலும் விபரங்களுக்கு தொலைபேசி எண்: 044- 24937471. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பங்களை வரும் 15-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் அல்லது அதற்கு முன்னரோ சென்னை தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்திற்கு நேரிலும் அளிக்கலாம் அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News