வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிமுக, திமுக மோதல்: கரூரில் பரபரப்பு

கரூர் மாவட்ட ஊராட்சி 8வது வார்டு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தில், திமுக - அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது.

Update: 2021-10-12 07:15 GMT

கரூர் மாவட்ட ஊராட்சி எட்டாவது வார்டு இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் திமுக- அதிமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.  

கரூர் மாவட்ட ஊராட்சி எட்டாவது வார்டு இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணிகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.  வாக்கு எண்ணும் பணி தொடங்கிய நிலையில், ஒதுக்கீடு செய்யப்பட்ட மேஜைகளில் அட்டவணை வரிசைப்படி பெட்டிகளை அமைக்கவில்லை என அதிமுகவினர் குற்றச்சாட்டினர். ஏற்கனவே ஒதுக்கப்பட்டது போல் வரிசைப்படி பெட்டிகளை அமைக்க வேண்டும் என அதிமுகவினர் வலியுறுத்தினர். அப்போது திமுக, அதிமுகவினர் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

அதிகாரிகள் சமாதானப்படுத்திய, முறையாக வாக்கு சீட்டுகளை ஒதுக்கப்பட்ட மேசையில் வைத்து எண்ண ஆரம்பித்தனர். தொடர்ந்து ஊராட்சி வாரியாக வாக்கு எண்ணும் பணி தொடங்கிய நிலையில், வாக்குச்சீட்டுகளை சரியாகக் காட்டாமல் பெட்டியில் போட்டதாக வாக்குவாதம் எழுந்தது. மேலும், வாக்கு சீட்டில் முத்திரை சரியாக விழாத்தால், அதை சந்தேக வாக்கு என வைக்க அதிகாரிகள் கூறினர்.

இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, திமுக - அதிமுகவினர் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவரையொருவர் தள்ளிக் கொண்டு தாக்கினர். இதனால், ஏராளமான போலீசார் வாக்கு எண்ணுமிடத்துக்கு வரவழைக்கப்பட்டனர். இதன் காரணமாக, சுமார் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு, வாக்கு எண்ணும் பணி தொடங்கியது.

Tags:    

Similar News