அமைச்சர் செந்தில்பாலாஜியை பாராட்டிய முதல்வர்..!

CM News Live - அமைச்சர் செந்தில் பாலாஜி திறம்பட செயல்படுகிறார் என்று முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-02 07:05 GMT

CM News Live - கரூரில் ரூ.581.44 கோடி மதிப்பிலான 99 புதிய பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து ரூ.28.60 கோடி மதிப்பிலான 95 முடிவுற்ற பணிகளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இவ்விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:கரூர் மாவட்டத்தில் ஜவுளி காட்சி அரங்கம், ஜவுளி பொருட்கள் பரிசோதனை மையம் அமைக்கப்படும். தமிழக மக்களுக்கு செய்த திட்டங்களை நினைத்து நான் மன நிறைவு வருகிறது. கரூர் என்றால் எப்போதுமே பிரம்மாண்டம் தான். அதற்கு இந்த விழா ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது.

எப்போதும் எதையும் பிரமாண்டமாக நடத்துபவர் அமைச்சர் செந்தில்பாலாஜி. மக்கள் பணிகளுக்கு இலக்கு வைத்து முடித்து காட்டுபவர் அமைச்சர் செந்தில்பாலாஜி. விவசாயிகளுக்கு 1 லட்சம் மின் இணைப்புகளை குறுகிய காலத்தில் வழங்கியவர். இதை செய்து காட்டிய அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பாராட்டுகள். அவருடன் துணை நின்ற அனைவருக்கும் வாழ்த்துகள் ஆட்சிக்கு வந்த முதல்நாள் முதல் மக்களுக்காக பணியாற்றி வருகிறோம். கருணாநிதிதான் என்னுள் இருந்து என்னை இயக்கி கொண்டிருக்கிறார். மக்களுக்கு நன்மை செய்வதற்கே எங்களுக்கு நேரம் போதவில்லை. அதனால் தான் வீண் விமர்சனங்களுக்கு பதில் சொல்வது இல்லை. என்னை எதிர்த்து கருத்து சொல்வதன் மூலம் பிரபலமாக நினைக்கிறார்கள். இவ்வாறு, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News