கரூரில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்பாட்டம்

கரூர் மாவட்ட அதிமுக சார்பில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து மாவட்ட செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-02-28 16:00 GMT

கரூரில் அதிமுக சார்பில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

கரூர் மாவட்ட அதிமுக சார்பில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதினை கண்டித்து ஆர்பாட்டம் மாவட்ட செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

கரூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில், முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளருமான ம.சின்னசாமி, மாவட்ட பிற அணி செயலாளர்கள் என்று ஏராளாமனோர் கலந்து கொண்டு தமிழக அரசினையும், பொய்வழக்கு போடும் திமுக கட்சியின் காவல்துறையை கண்டித்தும், காவல்துறை, ஏவல்துறையாக செயல்பட்டு வருகின்றது என்பன உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர்.

கூட்டத்தில் பேசிய எம்.ஆர்.விஜயபாஸ்கர்,  மக்களிடம் இருந்து கொள்ளை அடித்து வைத்துள்ள பணத்தினை கொடுத்து மக்களை விலைக்கு வாங்கி விடலாம் என்று கருதுகின்றனர். கரூரில் அதிமுக கட்சி அலுவலகத்தில் சோதனை நடத்துவது தான் காவல்துறையின் சாதனையா? திமுகவினர் வாக்கிற்கு பணம் கொடுக்கும் போது, இங்கே கொடுக்காதே, அங்கே சென்று மறைவாக கொடு என்று சொல்லுவது தான் கரூர் மாவட்ட காவல்துறை என்றும் குற்றம் சாட்டினார்.

ஆகையால், மாபெரும் எதிர்கட்சியாக இன்றும் அதிமுக என்கின்ற இயக்கம் சட்டமன்றத்தில் மக்களுக்காக குரல் கொடுக்கின்றது. நடந்து முடிந்த நகரமைப்பு தேர்தலில், கள்ள ஒட்டு போட்டு அனைத்து இடங்களையும் திமுக பிடித்துள்ளது. 2011 ல் தேர்தலை சந்திக்கும் போது, எதிர்கட்சியாக கூட வரமுடியாத இயக்கம் தான் திமுக கட்சி, அதுமட்டுமில்லாமல், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் திமுக கட்சி டெபாசிட் கூட வாங்க முடியாத கட்சி தான் திமுக என்றும் அவர் கூறினார்.

வரும் 2024ம் ஆண்டு  நிச்சயம் பாராளுமன்ற தேர்தலுடன், தமிழக சட்டசபை தேர்தலும் வரும் ஆகவே மக்கள் நல்ல பாடத்தினை திமுக விற்கு புகட்டுவார்கள் என்றார்.

Tags:    

Similar News