அதிமுக உள்கட்சி தேர்தல் பணிகள் தொடக்கம் விறுவிறுப்பாக விருப்ப மனு

கரூர் மாவட்டத்தில் அதிமுக உள்கட்சி தேர்தல் பணிகள் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் தலைமையில் தொடங்கியது.

Update: 2021-12-14 01:49 GMT

அதிமுக உள்கட்சி நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட முன்னாள் அமைச்சர்கள்  நத்தம் விசுவநாதன், எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோரிடம் விருப்ப மனு  அளிக்குமர அதிமுகவினர்

அதிமுக உள்கட்சி தேர்தலுக்கான பணிகள் கரூர் மாவட்டத்தில் தொடங்கியது. முன்னாள் அமைச்சர்கள். நத்தம் விசுவநாதன், எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோரிடம் தொண்டர்கள் விருப்ப மனு அளித்தனர்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில்  5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கிளைக் கழக நிர்வாகிகள், வார்டு கழக நிர்வாகிகள், மாநகராட்சி வட்ட கழக நிர்வாகிகளுக்கான தேர்தல் பணிகள் தொடங்கியது. 

கரூர் மாவட்டத்தில் ஒன்றிய நிர்வாகிகளுக்கான தேர்தல் 17 இடங்களிலும், பேரூர் கழக நிர்வாகிகளுக்கான தேர்தல் 11 இடங்களிலும், நகரக் கழக நிர்வாகிகளுக்கான தேர்தல் 4 இடங்களிலும் விருப்ப மனு பெறப்படுகிறது.

    அதிமுக தலைமை கழகத்தின் அறிவிப்பின்படி கரூர் மாவட்டத்தின் உட்கட்சித் தேர்தல் நடத்தும் பொறுப்பாளராக அதிமுக அமைப்புச் செயலாளரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளருமான  நத்தம் விசுவநாதன்,  கரூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சருமான  எம்.ஆர்.விஜயபாஸ்கரும்   இணைந்து ஒவ்வொரு பகுதியிலும் தேர்தல் நடக்கும் பணிகளை பார்வையிட்டனர்.    ஒன்றிய கழக, பேரூர் கழக, நகர கழக நிர்வாகிகளுக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஆர்வமுடன் விருப்ப மனு அளித்தனர்.   

Tags:    

Similar News