ராகுலை அசத்திய கிராமத்து சமையல் கலைஞர்கள்

Update: 2021-01-30 09:15 GMT

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கரூரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டபோது, அவருக்கு விருந்து அளித்து சமையல் யூடியூப் சேனல் நடத்தும் புதுக்கோட்டையைச் சேர்ந்த கிராமத்து சமையல் கலைஞர்கள் அசத்தியுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த சுப்பிரமணி மற்றும் அவருடன் சேர்ந்து சமையல் கலைஞர்கள் ,சமையலுக்கான யூ டியூப் சேனலை நடத்தி வருகின்றனர். முழுக்க முழுக்க கிராமத்து சமையல் முறையில், சைவம், அசைவம் சமைப்பது என இவர்கள் நடத்தி வரும் யூடியூப் சேனல் மிகப் பிரபலம். இந்நிலையில் கரூரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட ராகுல்காந்திக்கு இந்த சமையல் கலைஞர்கள் குழு காளான் பிரியாணி செய்து அசத்தியுள்ளனர்.காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி இதற்காக யூடியூபில் பிரபலமான இந்த சமையல் கலைஞர்களை தேர்வு செய்துள்ளார்.

கரூர் தேர்தல் பரப்புரையின் போது ராகுல், வாங்கல் கிராமத்தில் விவசாயிகளுடனான கலந்துரையாடலை முடித்துக் கொண்டு, நேராக அரவக்குறிச்சி அருகே ஒரு கிராமத்து தோட்டத்துக்கு சென்றார். அங்கு புதுக்கோட்டை சமையல் கலைஞர்கள் ஏற்கெனவே பாதி சமையலை முடித்து விட்டிருந்திருந்தனர். அங்கு வந்த ராகுல் எல்லோரிடமும் கை குலுக்கி நானும் உங்களுடன் சேர்ந்து சமைக்கிறேன் என கூறி சமையல் கலைஞர்களுடன் சேர்ந்து காளான் பிரியாணியை சமைத்து, தரையில் அமர்ந்து அதில், வாழை இலை போட்டு, சமைத்த அந்த சமையல் கலைஞர்களையும், அருகே அமர வைத்து அவர்களுடனே சாப்பிட்டுள்ளார். இந்த நிகழ்வு அப்பகுதியில் பேசு பொருளாகியுள்ளது.

Tags:    

Similar News