கரூர் மாநகராட்சியினை கைப்பற்றியது திமுக

கரூர் மாநகராட்சியினை கைப்பற்றியது திமுக பெரும்பான்மையினை நிருபித்து திமுக கோட்டையாக மாற்றினார் அமைச்சர் செந்தில்பாலாஜி

Update: 2022-02-22 10:00 GMT

தமிழகத்தின் மைய மாவட்டம் என்கின்ற புகழும் பெயரும் பெற்ற கரூர் நகராட்சியிலிருந்து பெருநகராட்சியாக கடந்த அதிமுக ஆட்சியில் மாற்றியது. கரூர், தாந்தோன்றிமலை, இனாம் கரூர் ஆகிய 3 நகராட்சிகளையும் ஒன்றிணைத்து பெருநகராட்சியாக மாற்றியது. இந்நிலையில், இந்த திமுக ஆட்சியில் கரூர் நகராட்சியை மாநகராட்சியாக மாற்றி, அதே வார்டுகளை கொண்டு, தற்போது கடந்த 19ம் தேதி நடைபெற்ற தேர்தலில் வாக்குப்பதிவினை பெற்றது.இதுமட்டுமில்லாமல்,கரூர் மாநகராட்சியாக தேர்வான நிலையில், மாநகராட்சியாக முதல் தேர்தலை கரூர் மக்கள் கண்டுள்ளனர். இந்நிலையில், 48 வார்டுகளை கொண்ட இந்த மாநகராட்சியில், 22வது வார்டு திமுக வேட்பாளர் பிரேமா என்பவர் போட்டியின்றி கடந்த 8ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் மீதமுள்ள 47 வார்டுகளில், 42 வார்டுகளை திமுக கட்சி கைப்பற்றியது. அதிமுக 2 இடங்களையும், காங்கிரஸ் கட்சி ஒரு இடம், கம்யூனீஸ்ட் (மா) ஒரு இடம் என்றும், திமுக வின் ஆதரவு பெற்ற சுயேட்சைகள் இரண்டு என்று மொத்தம் 48 வார்டுகளில் திமுக கட்சி மொத்தம் 42 வார்டுகளையும், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகள் என்று தலா ஒன்றும், மொத்தம் கூட்டணியில் 44 இடம் கரூர் மாநகராட்சியினை பிடித்துள்ளது. இதுமட்டுமில்லாமல், திமுகவின் ஆதரவு பெற்ற சுயேட்சை என்பதினால் அவர்களும் திமுக கட்சி என்பதினால் திமுக மொத்தம் 44 ஆகவும், திமுக கூட்டணியில் 46 ஆகவும் மீதமுள்ள 2 இடங்களை அதிமுக பிடித்து, திமுக வின் கோட்டையாக தனி இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி, கோவை மாவட்ட திமுக தேர்தல் பொறுப்பாளருமாகவும் இருந்து வந்த நிலையில், கோவை மற்றும் கரூர் மாவட்டத்தினை திமுக கோட்டையாக மாற்றியுள்ளார்.

Tags:    

Similar News