மீன் மார்க்கெட்களில் காற்றில் பறக்கும் சமூக இடைவெளி

Update: 2021-05-11 14:00 GMT

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி மீன்-இறைச்சி மற்றும் காய்கறி மார்க்கெட் செண்பகராமன்புதூர் செல்லும் சாலையில் இயங்கி வருகிறது. இங்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வருவதால் கொரோனா தொற்று வேகமாக பரவுகின்ற அபாய சூழ்நிலை ஏற்பட்டுவருகிறது.

இந்த மார்க்கெட்டை எம்.ஜி.ஆர் சிலை அருகில் உள்ள சாலையின் இருபுறங்களிலும் வியாபாரம் செய்ய வேண்டுமெனவும், சமூக இடைவெளி மற்றும் முககவசம் அணிந்து விற்பனையில் ஈடுபட வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரி சொர்ணராஜ், தாசில்தார் ஜுலியன், பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயமாலினி, காவல் ஆய்வாளர் சீதாலெட்சுமி ஆகியோர் அப்பகுதியினை பார்வையிட்டு, பின்னர் அவ்வழியாக செல்லும் வாகனங்களை மாற்றுப் பாதையில் செல்ல ஏற்பாடு செய்தனர்.

Tags:    

Similar News