மனு கொடுக்க வந்த முதியவர்கள்: தேடி வந்து மனு பெற்ற குமரி எஸ்பி

குமரியில் மனு கொடுக்க வந்த முதியவர்களை தேடி வந்து மனு வாங்கிய குமரி காவல் கண்காணிப்பாளர்.

Update: 2022-04-21 08:30 GMT

குமரியில் முதியவர்கள் இருக்கும் இடத்திற்கே நேரடியாக சென்று மனு வாங்கிய எஸ்பி.

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் பொது மக்களின் பிரச்சனைகள் குறித்த மனுக்களை நாள்தோறும் பெற்று அது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகிறார். இன்று வழக்கம் போல் பொது மக்கள் தங்கள் பிரச்சனைகள் குறித்த மனுக்களை அளிக்க வந்திருந்தனர். அப்போது மாவட்டத்தில் பல்வேறு பகுதியிலிருந்து முதியவர்கள் மனுவினை அளிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.

இதனை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரன் பிரசாத் முதியவர்கள் இருக்கும் இடத்திற்கே நேரடியாக சென்று மனுவினை வாங்கி மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதனிடையே மாவட்ட காவல் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் 04652 220167 என்ற தொலைபேசி எண்ணை மூத்த குடிமக்கள் தொடர்பு கொண்டு அவர்கள் புகார் தொடர்பான விவரங்களை தெரிவிக்கலாம்.

புகார் தெரிவித்தவுடன் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திலிருந்து 24 மணி நேரத்திற்குள் அவரது வீடுகளுக்கே நேரடியாகச் சென்று புகார் குறித்து விசாரணையை போலீசார் மேற்கொள்வார்கள். மனு அளிக்க முதியவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வர தேவையில்லை என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News