வாலாஜாபாத் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பிளான்ட்: கலெக்டர், எம்எல்ஏ துவக்கி வைப்பு

வாலாஜாபாத் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பிளான்டை கலெக்டர் ஆர்த்தி எம்எல்ஏ சுந்தர் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

Update: 2022-01-13 09:45 GMT

வாலாஜாபாத் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பிளான்ட்டை கலெக்ர் ஆர்த்தி, எம்எல்ஏ சுந்தர் தொடங்கி வைத்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையால் சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராம பொது மக்கள் நாள்தோறும் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்றும்,  பல்வேறு வியாதிகளுக்கு மருத்துவ ஆலோசனைகளும் பெற்று வருகின்றனர்.

கடந்த கொரோனாவின் போதே இனிவரும் காலங்களில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்கப்படும் என சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில்  மாண்டோ ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தின் நிதி உதவியுடன் SNS பவுண்டேஷன் மூலம் அமைக்கப்பட்ட 250 LPM கொண்ட ரூ.33 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜன் பிளான்டை இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா ஆர்த்தி, எம்எல்ஏ சுந்தர் ஆகியோர் இன்று நோயாளிகளின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தனர்.

கொரோனா பரவல் தொடர்பான அரசு விதிமுறைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களும் தேவையில்லாமல் வீட்டிலிருந்து வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

Tags:    

Similar News