காஞ்சிபுரம் ரோட்டரி கிளப் சார்பில் 169 பேருக்கு கண் அறுவை சிகிச்சை

காஞ்சிபுரம் ரோட்டரி கிராண்ட் சங்கம் சார்பில், ஓரிக்கை தனியார் பள்ளியில் கடந்த ஒரு வாரமாக சிறப்பு கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

Update: 2024-05-02 07:05 GMT

காஞ்சிபுரம் ரோட்டரி கிளப் கிராண்ட் சங்கம் சார்பில் மாபெரும் கண் அறுவை சிகிச்சை முகாமில் பங்கேற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட நபர்களுடன் சங்க நிர்வாகிகள்

ரோட்டரி கிளப் ஆப் காஞ்சிபுரம் கிராண்ட் சங்கம் சார்பில் கண்புரை அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்கள் 169 பேர் நலமுடன் வீடு திரும்பினர்.

ரோட்டரி கிளப் ஆப் காஞ்சிபுரம் கிராண்ட் சங்கம், யங் இந்தியன்ஸ் காஞ்சிபுரம் சங்கம், சென்னை சங்கரா நேத்ராலயா கண் மருத்துவமனை ஆகியன இணைந்து கடந்த 24.3.2024 ஆம் தேதி முதல் 02.04.2024 ஆம் தேதி வரை இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெறும் என பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஓரிக்கையில் அமைந்துள்ள பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த இலவச கண் பரிசோதனை முகாமில் 562 பேருக்கு இலவசமாக கண் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

மருத்துவ ஆலோசனைகள் பெற்றவர்களில் 169 பேர் தேர்வு செய்யப்பட்டு கண்புரை அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.கண்புரை அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி ஓரிக்கை பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

ரோட்டரி கிளப் ஆப் காஞ்சிபுரம் கிராண்ட் சங்கத்தின் தலைவர் சிவசிதம்பரம் தலைமை வகித்தார்.யங் இந்தியன்ஸ் அமைப்பின் காஞ்சிபுரம் கிளையின் தலைவர் ராஜராஜன், சங்கரா நேத்ராலயா கண் மருத்துவமனையின் மேலாளர் அருண்குமார்,பாரதி தாசன் பள்ளியின் தாளாளர் அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ரோட்டரி சங்க மாவட்ட வருங்கால ஆளுநர் ரவிக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சங்கம் செய்து வரும் சேவைகள் குறித்து விரிவாக பேசினார். பயனாளிகளும் கண்புரை அறுவைச் சிகிச்சை செய்தமைக்கு நன்றி தெரிவித்தனர்.

சந்திப்பு ஏற்பாடுகளை ரோட்டரி கிளப் ஆப் காஞ்சிபுரம் கிராண்ட் சங்கத்தின் நிர்வாகி ஜி.முருகேஷ் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News