இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு வாக்கி டாக்கி..

கோயில் பணி அலுவலர்கள் ஓருங்கிணைப்பிற்காக முதற் கட்டமாக 5 அலுவலர்களுக்கு வாக்கி டாக்கி வழங்கபட்டது

Update: 2022-05-07 08:45 GMT

இந்து சமய அறநிலைத்துறை சார்பில் ஒருங்கிணைப்பு பணி மேற்கொள்ள அலுவலருக்கு வழங்கப்பட்ட வாக்கிடாக்கி

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருப்பணிகள் ஆய்வு , நிர்வாக அனுமதி ,  தொழில்நுட்ப அனுமதி , ஒப்பந்தப்புள்ளி கோருதல்,  முன்னேற்றம் பணிகள் ஆகியவற்றை கண்காணித்தல்,  பணிகளை விரைந்து செயல்படுத்தவும் வகையில்  சார் நிலை அலுவலர்களிடம், தலைமை இடத்திலிருந்து ஒருங்கிணைக்கவும்,  அதனை கண்காணித்து ஆலோசனை வழங்கிடவும்  , விரைவாக செயலாற்ற முதல்கட்டமாக தலைமையிட அலுவலர்களுக்கும் மண்டல இணை ஆணையர்களுக்கும்,  செயற்பொறியாளர் , மாவட்ட உதவி ஆணையர்களுக்கும்,  தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு வாக்கி டாக்கி வழங்கி திட்டத்தை துவக்கி வைத்தார்.

அவ்வகையில் காஞசிபுரம் மண்டலத்தில் இணை ஆணையர்,உதவி ஆணையர் , செயற்பொறியாளர்கள் என காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 நபர்களுக்கு வாக்கிடாக்கி வழங்கபட்டுள்ளது . 

கோயில் சொத்துக்களை பார்வையிடுதல், அளவீடு செய்தல் , ஆக்கிரமிப்பு அகற்றுதல் போன்ற பணிகளை செம்மையாக செய்திடுவும் , கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகளையும் மேம்படுத்துதல் உள்ளிட்ட செயல்பாடுகளை விரைவாக மேற்கொள்ளும் பொருட்டு உதவி ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றும் வட்டாட்சியர்களுக்கும், முதல்நிலை கோயில்களில் பணியாற்றும் உதவி பாதுகாப்பு அலுவலர்களுக்கும் , செயல் அலுவலர்கள் ஆகியோருக்கு இரண்டாம் கட்டமாக வழங்கப்பட உள்ளது.

Tags:    

Similar News