நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: காஞ்சிபுரத்தில் இன்று 20 பேர் வேட்பு மனு தாக்கல்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 20 பேர் மனு செய்த நிலையில் இதுவரை 34 பேர் வேட்பு மனு தாக்கல்.

Update: 2022-02-01 13:00 GMT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 20 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, இரண்டு நகராட்சி, 3 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது.

இதற்கான வேட்பு மனு கடந்த வெள்ளிக்கிழமை அந்தந்த அலுவலகங்களில் துவங்கியது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம்156 உறுப்பினர்கள் தேர்வு செய்ய உள்ளனர். முதல் இரு நாட்கள் ஒரு வேட்புமனு தாக்கல் ஆகாத நிலையில் நேற்று 13 நபர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் இன்று காஞ்சிபுரத்தில் 7 வேட்பு மனுக்களும், குன்றத்தூர் நகராட்சியில் இரண்டு வேட்பு மனுக்களும், மாங்காடு நகராட்சியில் 9 வேட்பு மனுக்களும்,  ஸ்ரீபெரும்புதூரில் இரண்டு வேட்பு மனுக்களும் பெறப்பட்டது. உத்திரமேரூர் மற்றும் வாலாஜாபாத் பேரூராட்சியில் ஒருவர்கூட மனு தாக்கல் செய்யவில்லை.

இதுவரை காஞ்சிபுரம் மாநகராட்சி 10 வேட்பு மனுக்களும்,  குன்றத்தூர் நகராட்சியில் இரண்டு வேட்பு மனுக்களும், மாங்காடு நகராட்சி 12 வேட்பு மனுக்களும், உத்திரமேரூர் பேரூராட்சியில் இரண்டு மனுக்களும்,  ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் 8 என மொத்தம் 34 வேட்பு மனுக்கள் பெறப்பட்டு உள்ளது.

இதுவரை கடந்த நான்கு நாட்களில் வாலாஜாபாத் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் ஒருவர்கூட வேட்பு மனு அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News