காஞ்சிபுரம் மாநகராட்சி சத்யா நகரில் சிறப்பு தடுப்பூசி முகாம்.

சிறப்பு தடுப்பூசி முகாமில் உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர் மற்றும் மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Update: 2022-04-09 07:45 GMT

காஞ்சிபுரம் சத்யா நகர் பகுதியில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ.சுந்தர், மேயர் மகாலட்சுமி யுவராஜ், கவுன்சிலர் பூங்கொடி தசரதன்.

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் நோக்கில் சிறப்பு தடுப்பூசி முகாம் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடைபெற்று வருகிறது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 385 இடங்களில் இன்று சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. முதல் ,  இரண்டாம் தவணை தடுப்பூசி மற்றும் பூஸ்டர் ஊசிகள் போடப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 49-வது வார்டு பகுதியான சத்யா நகரில் இன்று காலை 10 மணியளவில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இப்பகுதியில் வீடுதோறும் தடுப்பூசியை போட்டுக் கொண்டவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு விழிப்புணர்வை மாமன்ற உறுப்பினர் பூங்கொடி தசரதன் ஏற்படுத்தினார்.

இதன் பின் நடைபெற்ற சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்தி கொண்ட போது உத்தரமேரூர் எம்எல்'ஏ சுந்தர் மற்றும் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

பிற்பகலுக்கு பிறகு இதே வட்டத்தில் இருவேறு இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

49வது வார்டு பகுதியில் அனைத்து வீடுகளில் வசிப்பவர்கள் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர் என்பது குறித்து முழுமையான ஆய்வு மேற்கொண்டு 100 சதவீத தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட பகுதியாக மாற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுமென மாமன்ற உறுப்பினர் பூங்கொடி தசரதன் தெரிவித்தார்.

Tags:    

Similar News