காஞ்சிபுரத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மையம், கலெக்டர் ஆய்வு

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு அமைக்கப்படவுள்ள. வாக்கு எண்ணிக்கை மையத்தினை கலெக்டர் ஆர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2021-09-01 13:30 GMT

வாக்கு எண்ணிக்கை மையம் அமையவுள்ள இடத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் மா.ஆர்த்தி.

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளை மாநில தேர்தல் ஆணையத்துடன் இணைந்து தமிழக அரசு செய்து வருகிறது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல்கட்டமாக வாக்குசாவடிகள் குறித்து அனைத்து கட்சி உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது. அதைதொடர்ந்து வாக்குசாவடிகள் குறித்து பட்டியல் வெளியானது.

நேற்று கடந்த சட்டமன்ற தேர்தல் நடைபெற்றபோது வெளியிட்ட வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர் சேர்க்கைக்கு பின் தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்கவுள்ள வாக்காளர் குறித்த பட்டியல் மற்றும் ஒன்றியம் வாரியாக வாக்காளர் விவரங்கள் அளிக்கபட்டு பட்டியல் வெளியிடப்பட்டது. 

இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவாகும்  வாக்குகளை எண்ணிட பொன்னேரிகரை பகுதியில் அமைந்துள்ள அண்ணா அரசு உறுப்பு பொறியியல் கல்லூரியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி ஆய்வு மேற்கொண்டார்.

இதில் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது கடைபிடிக்க பட்ட வழிமுறைகள் மற்றும் தற்போது கூடுதல் பணிகள் குறித்தும்  மாவட்ட ஊராட்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி , தேர்தல் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

Tags:    

Similar News