காஞ்சிபுரத்தில் சேதமடைந்த பேருந்து நிழற்குடையை சீரமைக்க கோரிக்கை

காஞ்சி- வந்தவாசி சாலையில் பல்லவன் நகர் பேருந்து நிலைய நிழற்குடையை உடனடியாக சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Update: 2022-05-16 11:00 GMT

சேதமடைந்துள்ள காஞ்சிபுரம் பல்லவன் நகர் பேருந்து நிலைய நிறுத்தம்.

காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அடுத்த பல்லவன் நகர் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்புகள் அமைந்துள்ளது.

இப்பகுதி சுற்றியும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் குடியிருப்புகள் மற்றும் பல்வேறு தனியார் குடியிருப்பு பகுதிகள் அடுக்குமாடி குடியிருப்புகள் என முக்கியமான பகுதியாக விளங்கி வருகிறது.

இப்பகுதியில் சாலை ஓரம் அமைந்துள்ள பல்லவன் நகர் பேருந்து நிலைய நிறுத்தத்தில் கடந்த அ.தி.மு.க .ஆட்சியில் முன்னாள் அமைச்சர் சோமசுந்தரத்தின் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்டது.

பேருந்து நிறுத்தத்தின் பின்புறம் குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் மழை நீர் செல்ல கால்வாய் சுமார் 500 மீட்டர் தூரம் அமைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் பேருந்து நிலையத்தின் உட்புறம் திடீரென உள்வாங்கி கால்வாய் கால்வாய் கரைகள் அனைத்தும் சேகமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.

அதிகாலை பள்ளி , கல்லூரி செல்லும் மாணவிகள் , தொழிற்சாலை ஊழியர்கள் உள்ளிட்டோர் பயணிகள் யாரும் அந்த நிழற்குடையில் நிற்கவோ,  அதன் அருகில் செல்லவோ அச்சப்படுகின்றனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சி உடனடியாக இந்த பேருந்து நிலையத்தில் உணவை அமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அனைவரும் கோரிக்கை வைத்துள்ளனர்.


Tags:    

Similar News