பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: 4 கிராம மாணவர்கள் பள்ளி புறக்கணிப்பு

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 58 வது நாளாக போரட்டத்தில் பள்ளிக் குழந்தைகளுடன் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2022-09-22 16:45 GMT

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று 58வது நாள்  போராட்ட அறிவிப்பு பலகை.

காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் பகுதியில் மத்திய மாநில அரசுகள் இணைந்து இரண்டாவது விமான நிலையம் அமைக்க அறிக்கையை வெளியிடப்பட்டது.

இதற்காக 13 கிராமங்களில் இருந்து சுமார் 4700 ஏக்கர் நிலம் கையகப்படுத்த உள்ளது இதில் நீர்நிலைகள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளதால் இதற்கு அப்பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து நாள்தோறும் இரவு நேரங்களில் 57வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இவர்களது இவர்களுக்கு ஆதரவாக இவர்களது குறை கேட்க பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நாள்தோறும் அப்பகுதிக்கு வந்து பொதுமக்களிடம் உரையாடி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக அரசின் பத்திரப்பதிவுத்துறை நேற்று திடீரென அறிக்கை வெளியிடப்பட்டது இதில் விவசாயிகள் தங்கள் விலை நிலங்களை விற்பதற்கு மாவட்ட ஆட்சியிலும் தடை இல்லா சான்று பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தங்கள் விலை நிலங்களை விற்பதற்கு தங்களுக்கு உரிமை உள்ள நிலையில் அதற்கு தடையில்லா சான்று கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் எனவும் இதனை கைவிட வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.

இன்று 58 வது நாள் போரட்டத்தில் ஏகானாபுரம் , நெல்வாய்‌, மேலேறி , நாகபட்டு ஆகிய கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ , மாணவிகள் அனைவரும் பள்ளிக்கு செல்லாமல் புறக்கணிக்க போவதாக இன்று முடிவு செய்யப்பட்டது.

காலாண்டு தேர்வு உள்ள நிலையில் இது போன்ற முயற்சி அதிர்ச்சி தருகிறது.

Tags:    

Similar News