முழு ஊரடங்கை மீறியவர்களுக்கு காவல்துறை அபராதம்

காஞ்சிபுரத்தில் முழு ஊரடங்கை மீறி திருமண நிகழ்ச்சிக்கு சென்றவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

Update: 2022-01-23 14:45 GMT

காஞ்சிபுரத்தில் முழு ஊரடங்கில் அதிரடி ஆய்வு மேற்கொண்ட போலீஸ் எஸ்பி சுதாகர்

தமிழகத்தில் உருமாறிய கொரோனா பரவலை தடுக்க சில தளர்வுகளுடன் ஊரடங்கு மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை ஆன இன்று முழுமையாக கடைபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நள்ளிரவு 10 மணி முதலே காவல்துறையினர் ஊரடங்கு காவல் பணிகளில் ஈடுபட்டு தொழிற்சாலை மற்றும் அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் இன்று முகூர்த்த தினம் என்பதால் திருமண நிகழ்வில் கலந்து கொள்ள 100 பேருக்கு மட்டுமே அனுமதி அளித்த நிலையில் இன்று அதிக அளவில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகரித்து இதைக்கண்ட காவல்துறை உடனடியாக விதிகளை மீறி சென்ற நபர்களுக்கு காவல் கண்காணிப்பாளர் சுதாகர் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பினார்.

திருமண நிகழ்வுகளை சாதகமாக்கிக் கொண்ட பொதுமக்கள் திருமண பத்திரிக்கையை கொண்டு காஞ்சிபுரம் நகரில் அதிக அளவில் உலா வந்தனர்.

Tags:    

Similar News