அரசு தோட்டக்கலைப் பண்ணையில் செடி, மரக்கன்றுகள் வாங்கி செல்லும் பொதுமக்கள்

களக்காட்டூர் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் பரிசளிக்க செடி மற்றும் மரக்கன்றுகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

Update: 2021-10-23 07:45 GMT

களக்காட்டூர் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் ஆர்வமுடன் மரக்கன்றுகளை வாங்கும் பொதுமக்கள்.

புரட்டாசி மாதம் முடிந்து ஐப்பசி மாதம் துவங்கி சில நாட்கள் ஆன நிலையில் இன்று முதல் திருமண வைபவங்களும் மற்ற விஷேசங்களும் நடைபெறத் துவங்கியுள்ளது..

தற்போது இயற்கை சூழல் ஆர்வலர்கள் கருத்துக்களை மக்கள் ஏற்றுக் கொண்டு தங்களால் முடிந்த அளவிற்கு மரம் வளர்க்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதை ஊக்கப்படுத்தும் வகையில் திருமணம் மற்றும் இதர வைபவங்களில் மற்றும் அரசு அலுவல் நிகழ்ச்சிகளில் விருந்தினர்களுக்கும் மரக்கன்றுகளை பரிசாக அளித்து வருகின்றனர்.

இன்று முதல் திருமண நிகழ்வுகள் துவங்க உள்ளதால் காஞ்சிபுரம் அடுத்த களக்காட்டூர் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் பல்வேறு மலர் செடிகள் மற்றும் மலர் வகைகள் உற்பத்தி செய்யப்பட்டு தரமான வகையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனை வாங்க ஆர்வமுடன் பொது மக்கள் நாள்தோறும் வந்து தங்களுக்குத் தேவையான மலர் மற்றும் மர கன்றுகளை அங்குள்ள அலுவலர்களிடம் கேட்டு பணம் செலுத்தி வாங்கி செல்கின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், அரசு தோட்டக்கலைப் பண்ணையில் தரமான முறையில் மலர் மற்றும் மரங்கள் உருவாக்கப்பட்டு உள்ளதாகவும் குறைந்த விலையில் கிடைப்பதால் இதை அன்பளிப்பாக அளிப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும், பெற்றுக் கொள்பவர்கள் சிறந்த முறையில் வளர்ந்து வருவதால் இரு தரப்பினரும் மகிழ்ச்சி கொள்வதாக உள்ளது என தெரிவித்தனர்.

Tags:    

Similar News