லாரி மோதி தேநீர் கடை உரிமையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

காஞ்சிபுரம் அடுத்த புஞ்சை அரசன்தாங்கல் பகுதியில் இருசக்கர வாகனத்தின் பின்பக்கம் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்

Update: 2022-08-09 15:30 GMT

விபத்து ஏற்படுத்திய நெல் மூட்டை லாரி மற்றும் விபத்தில் சிக்கிய தேநீர் கடை உரிமையாளர் குமார்

காஞ்சிபுரம் தாமுல்வார் தெரு பகுதியை சேர்ந்தவர் த.குமார்(56). தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் , வசித்து வருகிறார். இவர்  காந்தி ரோடு சாலையில் தேநீர் கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இன்று நண்பகல் 12 மணியளவில் காஞ்சிபுரம் கற்பக விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த தனது நண்பர் லட்சுமிகாந்தன் (75) என்பவர் உடன் காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது புஞ்சை அரசன் தாங்கள் திருவள்ளூர் குடியிருப்பு அருகே பின்னால் வந்த நெல் மூட்டை லாரி மோதியது.

இதில் இரு சக்கர வாகனம் நிலை குனிந்த நிலையில் இருவரும் கீழே விழுந்த போது குமார் மீது லாரி ஏரி நசுக்கியது. லட்சுமி காந்தன் பலத்த காயங்களுடன் சாலை ஓரம்  விழுந்தார்.

இதைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக லட்சுமி காந்தனை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு 108 வாகன மூலம் அனுப்பி வைத்து அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு சென்னை போரூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

விபத்தில் சிக்கி பலியான தேநீர் கடை உரிமையாளர் குமார் உடலை கைப்பற்றி காஞ்சி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து உடல் கூறு ஆய்விற்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய லாரி ஓட்டுனரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News