ரூ.36 கோடி மதிப்பீட்டில் புதிய நவீன பஸ் நிலையம், நகரில் மல்டி கார் பார்க்கிங் இடம் ஆய்வு

நகராட்சிகளின் இயக்குனர் பா.பொன்னையா காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2022-07-01 08:45 GMT

காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகம், மல்டி லெவல் கார் பார்க்கிங் இடங்களை ஆய்வு செய்த நகராட்சிகளில் இயக்குநர் பொன்னையா.

காஞ்சீபுரம் அருகே காரைப்பேட்டையில் ரூ.36 கோடி மதிப்பீட்டில் புதிய நவீன பஸ் நிலையம் அமைக்கப்படும் என்றும், கூட்ட நெரிசலை குறைக்க மல்டி கார் பார்க்கிங் அமைக்கப்படும் என்று நகராட்சிகளின் இயக்குனர் பொன்னையா காஞ்சீபுரத்தில் நிருபர்களிடம் பேட்டியளித்தார்.

தமிழக நகராட்சிகளின் இயக்குனரும், மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான பொன்னையா இன்று காலை காஞ்சீபுரம் மாநகராட்சிக்கு வருகை தந்தார். அவரை காஞ்சீபுரம் மாநகராட்சி ஆணையர் கண்ணன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், துணை மேயர் குமரகுருநாதன்,  மற்றும் நகராட்சி அலுவலர்கள் அவரை வரவேற்றனர்.

பிறகு நகராட்சிகளின் இயக்குனர் பா.பொன்னையா நிருபர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர்  கூறியதாவது:

தமிழக முதல்வரின் அறிவுரைக்கிணங்க, பேரறிஞர் அண்ணா பிறந்த புண்ணிய பூமிக்கு  வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அறிவுரை கூறியுள்ளேன். காஞ்சீபுரத்தில் பழைய பஸ் நிலையம் இயங்கி வருகிறது. இப்போது புதியதாக  சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை காரைப்பேட்டையில் ரூ.36 கோடி மதிப்பீட்டில் புதிய நவீன பஸ் நிலையம் அமைக்கப்படும். 

மேலும் பட்டு மற்றும் கோவில் நகரமான காஞ்சீபுரத்தில் கூட்ட நெரிசலை மல்டி கார் பார்க்கிங் அமைக்க 6 ஏக்கர் பரப்பளவிலான இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தேன். காஞ்சீபுரம் மாநகராட்சி பழைய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இப்போது அந்த கட்டிடம் விரைவில் இடிக்கப்பட்டு ரூ.16 கோடி மதிப்பீட்டில் 3 அடுக்கு கொண்ட லிப்ட் வசதியுடன் புதிய கட்டிடம் விரைவில் கட்டப்படும்.

தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா காஞ்சீபுரம் மாநகராட்சியில் எழுத்தராக பணிபுரிந்தார். அந்த இடத்தை நகராட்சிகளில் இயக்குனர் பார்வையிட்டார். அப்போது அந்த இடத்தில் அண்ணாவின் நினைவாக,  கண்ணாடி அறை அமைக்கப்பட்டு அண்ணாவின் உருவபடம் வைக்கப்படும் என்றார்.

காஞ்சீபுரம் காந்திரோட்டில் இயங்கி  வரும் ராஜாஜி மார்க்கெட் இடிக்கப்பட்டு அதே இடத்தில் புதிய மார்க்கெட் ரூ.7 கோடி மதிப்பீட்டிலும், இதேபோல் பெரிய காஞ்சீபுரத்தில் இயங்கி ஜவஹர்லால் மார்க்கெட் இடிக்கப்பட்டு ரூ.5 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மழை நேரங்களில் மழைநீர் சீராக செல்ல காஞ்சீபுரம் மஞ்சள் நீர் கால்வாய் முழுவதும் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Tags:    

Similar News