புதிய நியாய விலை கட்டிடத்தை திறந்து வைத்த எம்எல்ஏ

இந்திரா நகரில் கட்டப்பட்ட புதிய நியாய விலை கட்டிடத்தை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் திறந்து வைத்தார்.

Update: 2022-05-22 06:00 GMT

புதிய நியாய விலைக் கடைகளில் திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் அரிசியின் தரத்தை ஆய்வு செய்தார்.

காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி வி எம் பி ஏழிலரசன் தனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்கி செயல்படுத்தி வருகிறார். அவ்வகையில் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோனேரிகுப்பம் ஊராட்சிக்குட்பட்ட இந்திரா நகர் பகுதியில் ரூ. 13 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் புதிய நியாய விலை கடை கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது.

1014 குடும்ப அட்டைதாரர்கள் இப்பகுதியில் உள்ளதால் போதியளவு பொருட்கள் இருப்புகள் வைக்கவும் , பேரிடர் காலங்களில் பொருட்கள் சேதங்களை தவிர்க்கும் வகையிலும், ஊழியர்களின் கோரிக்கையான கழிவறையுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டப்பட்டு நிறைவு பெற்றது.

இன்று இதனை மக்கள் பயன்பாட்டிற்காக காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் உடன் அப்பகுதி பொதுமக்கள் இணைந்து ரிப்பன் வெட்டி புதிய கட்டிடத்தை திறந்து வைத்தனர். மேலும் இருப்பு வைக்கப்பட்ட அரிசி, பருப்பு ஆகியவற்றின் தரங்களை சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு மேற்கொண்ட பின் புதிய குடும்ப அட்டைகள் அப்பகுதியில் உள்ள ஐந்து நபர்களுக்கு வழங்கப்பட்டது.

புதிய நியாய விலை கடை திறந்தது ஒட்டி அப்பகுதி மக்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மலர் கொடி குமார், ஒன்றிய கவுன்சிலர் பிரசாத், திமுக ஒன்றிய செயலாளர் பி எம் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  திமுக பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதி மக்கள் சட்டமன்ற உறுப்பினருக்கு புதிய நியாய விலை கட்டிடத்தை திறந்து வைக்குமாறு கோரிக்கை விடுத்த மறுநாளே புதிய கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News