வரதராஜ பெருமாள் திருக்கோயில் தேரோட்டம்! லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

அத்திவரதர் புகழ்பெற்ற காஞ்சி வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவ ஏழாம் நாளில் திருத்தேர் உற்சவம் நடைபெற்றது.

Update: 2024-05-26 04:30 GMT

ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரமோற்ச ஏழாம் நாள் திருத்தேர் உற்சவத்தில் கலந்து கொண்ட பக்தர்கள்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயில் வைகாசி பிரம்மோற்சவ விழாவில் இன்று தேர் திருவிழாவில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்று சாமி தரிசனம்.

வைணவ திவ்ய தேசங்களில் புகழ்பெற்றதும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும் அத்தி வரதர் புகழ்பெற்ற காஞ்சி வரதராஜ பெருமாள் திருக்கோயில் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த ஏழு தினங்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நாள்தோறும் காலை மற்றும் மாலை வேலைகளில் பல்வேறு வாகனங்களில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் எழுந்தருளி ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார்.

இந்நிலையில் ஏழாம் நாள் திருத்தேர் உற்சவத்திற்காக அதிகாலை 3 மணிக்கு திருக்கோயிலில் இருந்து புறப்பட்டு நேரடி அருகே நிலை நிறுத்தப்பட்டிருந்த 73 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட ஏழு நிலைகள் கொண்ட தேரில் நீல நிறப் பட்டு உடுத்தி வைர வைடூரிய ஆபரணங்கள் அணிந்து ஸ்ரீதேவி பூதேவியுடன் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளினார்.


தமிழக அமைச்சர்கள் அன்பரசன் , செஞ்சி மஸ்தான், எம் பி செல்வம், அதிமுக முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர் பக்தர்கள் என பலர் வடம் பிடித்து இழுக்க 6 மணி அளவில் திருத்தேர் நிலையில் இருந்து புறப்பட்டது.

காந்தி சாலை வள்ளல் பச்சையப்பன் தெரு பேருந்து நிலையம் மற்றும் நான்கு ராஜ வீதிகள் வழியாக திருத்தேர் ஜேசிபி உதவியுடன் வலம் வருகிறது.

திருத்தேர் உற்சவத்தையொட்டி டிஐஜி பொன்னி தலைமையில் காஞ்சிபுரம் எஸ் பி சண்முகம் திருவள்ளூர் எஸ் பி சீனிவாச பெருமாள் தலைமையில் ஏராளமான காவல்துறையினர், ஊர்க்காவல் படையினர் உள்ளிட்ட 1500 க்கும் மேற்பட்ட காவலர்கள் பொதுமக்கள் பாதுகாப்பு பணிகளிலும் குற்ற சம்பவங்களை தடுக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News