மகாருத்ரேஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் - மதுரை ஆதீனம் பங்கேற்பு..!

காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் பகுதியில் அமைந்துள்ள மகாருத்ரேஸ்வரர் திருக்கோயில் புனரமைக்கு பின் இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது

Update: 2024-06-17 06:00 GMT

பிள்ளையார் பாளையம் மகா ருத்ரேஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தில் சிவாச்சாரியார்களால் கலசத்துக்கு புனித நீர் ஊற்றிய போது

காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் பகுதியில் உள்ள அருள்மிகு ஶ்ரீ மாணிக்க விநாயகர் மற்றும் ஶ்ரீ மஹாருத்ரேஸ்வரர் திருக்கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.இதில் திரளான பொது மக்கள் கலந்துக் கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார் பாளையம் பகுதியில் மாதனம்பாளையம் தெருவில் உள்ள பழமையான அருள்மிகு ஶ்ரீ மாணிக்க விநாயகர் மற்றும் காமாட்சி அம்மன் உடனுறை அருள்மிகு ஶ்ரீ மஹாருத்ரேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.


இத் திருக்கோவிலில் புரணமைக்கும் பணி நிறைவடைந்ததை தொடர்ந்து மஹா கும்பாபிஷேகத்தை ஒட்டி கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கணபதி பூஜை, மங்கல இசையுடன் தொடங்கி கோ பூஜை நடைபெற்று , இரணடாம் கால யாக பூஜை மேளத்தாளங்களுடன் பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் அடங்கிய கலச குண்டங்கள் யாகசாலையில் இருந்து ஊர்வலமாக ராஜ கோபுர விமானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அங்கு ராஜ கோபுர கலசங்கள் மீது சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தினர். இதனை தொடர்ந்து மகாதீபாராதனைகள் காட்டப்பட்டும், பக்தர்களின் மீது புனித நீர் தெளிக்கப்பட்டும், மஹா கும்பாபிஷேகமானது வெகு விமரிசையாக நடைபெற்றது.


பின் மூலவர் , மஹா கணபதி மற்றும் ருத்ரேஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர்.

இந்த மஹா கும்பாபிசேக விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானங்களும்,அருட் பிரசாதங்களும் வழங்கப்பட்டன.

Tags:    

Similar News