காஞ்சிபுரத்தில் லாரி உரிமையாளர் சங்க செயலர் பண மோசடி செய்ததாக புகார்

காஞ்சிபுரம் லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளராக இருந்தவர் ரூ. 5 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-07-25 11:30 GMT

காஞ்சிபுரம் லாரி உரிமையாளர் சங்க முன்னாள் செயலாளர் சங்க பணத்தை மோசடி செய்ததாக நிர்வாகிகள் மற்றும் லாரி உரிமையாளர்கள் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

காஞ்சிபுரம் அடுத்த சிறு காவேரிப்பாக்கம் பகுதியில் காஞ்சிபுரம் லாரி உரிமையாளர்கள் சங்க அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் சங்க உறுப்பினராக உள்ளனர்.

இந்நிலையில்  சங்கத்தில் செயலாளராக இருந்த எஸ். நந்தகுமார் என்பவர் சங்கத்தின் மூலம் பெறப்படும் லாரி வாடகைகளை முறையாக அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.

இதுகுறித்து சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலமுறை லாரி வாடகை மற்றும் ஆட்கள் கூலி தர வேண்டும் என கேட்டுட்டு முறையாக பதில் வராமல் ஒருமுறை காசோலையாக அளித்ததாகவும் அதை வங்கியில் செலுத்த வேண்டாம் என பலமுறை கூறி வந்துள்ளதாகவும் தெரிகிறது

இந்நிலையில் சங்கம் கூட்டத்தில் புது நிர்வாகிகளை அறிவித்ததால் முறையாக அளிக்காத 4 லட்சத்து 82 ஆயிரத்து 600 ரூபாயை உடனடியாக அளிக்க மீண்டும் தெரிவித்த போது செவி சாய்க்க மறுத்ததால் நிர்வாகிகள் அனைவரும் இன்று காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

இப் புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சிவ காஞ்சி காவல் நிலையத்தில் இவ்வழக்கு விசாரிக்கப்படும் என தெரிவித்தாக நிர்வாகிகள் கூறினர்.


Tags:    

Similar News