பச்சையப்பன் கிளை இடைநிலைப் பள்ளியில் மணிமண்டபத்துடன் பச்சையப்பன் சிலை திறப்பு

உயர்நீதி மன்ற நீதிபதி கலந்து கொண்டு மணி மண்டபத்துடன் அமைந்துள்ள பச்சையப்பர் சிலையினை திறந்து மரியாதை செலுத்தினார்.

Update: 2022-08-07 05:15 GMT

சின்ன காஞ்சிபுரம் பச்சையப்பன் கிளை இடைநிலைப் பள்ளியில் நிறுவப்பட்ட  மணி மண்டபத்துடன் கூடிய பச்சையப்பன் உருவச்சிலைக்கு சென்னை உயர்நீதி மன்ற நீதியரசர் எம். துரைசாமி திறந்து வைத்து மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சின்ன காஞ்சிபுரம் பகுதியில் கடந்த 1907 ஆம் ஆண்டு கல்வி வள்ளல் பச்சையப்பன் கிளை இடைநிலைப்  பள்ளியினை தொடங்கினார். இப்பள்ளியில் பேரறிஞர் அண்ணா கல்வி பயின்று குறிப்பிடதக்கது. ஏழை எளிய மாணவர்கள் தற்போதும் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளி தமிழக அரசின் உதவி பெறும் பள்ளிகளில் ஓன்றாக உள்ளது..

இந்நிலையில் இப்பள்ளி வளாகத்தில் மணிமண்டபத்துடன் கூடிய பச்சையப்பர் சிலை நிறுவப்பட்டது. இதனை சென்னை உயர்நீதி மன்ற நீதியரசர் எம். துரைசாமி திறந்து வைத்து மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு பேராட்சியர் மற்றும் பொறுப்பு சொத்தாட்சியர் நிர்வாகி ராஜூ மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

பச்சையப்பன்  ஆடவர் ,  மகளிர் கல்லூரி முதல்வர்கள் , பேராசிரியர்கள் ,  பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்,  ஆசிரியர்கள், கிளை இடைநிலைப்  பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உள்ளிட்ட  பலர் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் .


Tags:    

Similar News