காஞ்சிபுரத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Update: 2023-05-30 13:00 GMT

தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்க காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம் மற்றும் வணிகவரித் துறை அலுவலர் சங்கத்தினர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 50க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் திருச்சி, துறையூர் பகுதியில் பணிபுரிந்து வந்த வருவாய் ஆய்வாளர் மணல் கடத்தலை தடுக்க முயன்ற போது ஊராட்சி மன்ற தலைவரால் தாக்கப்பட்டார்.

ஏற்கனவே தூத்துக்குடி அருகே முறப்ப நாட்டில் கிராம நிர்வாக அலுவலர் அவரது அலுவலக அறையிலேயே படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தற்போது வரை அச்சுறுத்தலாகவே உள்ள நிலையில் தற்போது துறையூர் அலுவலர் சம்பவம் என் தொடர்ந்து வருவாய் துறை அலுவலர்கள் தாக்கப்பட்டு வரும் சம்பவத்தை கண்டித்து , அதன் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முயல வேண்டும் என கண்டன கோஷங்களை எழுப்பி முழக்கங்கள் எழுப்பினர்.


இதேபோல் வணிகவரித்துறை அலுவலர்கள் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கையில் வலியுறுத்தி மாநில துணைத்தலைவர் தலைமையில் கருப்பு பட்டை அணிந்து அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோட்டை மாறுதல் கோரியவர்களுக்கு ஆணை வழங்க மறுத்தல், அரசு அறிக்கைகள்  காட்டும் வேகத்தை ஊழியர்கள் நிழலில் காட்டவில்லை என்றும் பதவி உயர்வு வழங்குவதில் தாமதம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரே நேரத்தில் இரு அரசு துறை அலுவலகம் முன்பு தமிழக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News