காஞ்சிபுரம் : சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 4 பேர் அதிரடி கைது

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-08-12 11:45 GMT

காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு குற்ற வழக்குகள் ஈடுபட்ட ரவுடிகள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் உத்தரவிட்டார்.


அதனடிப்படையில் பொய்யாகுளம் பகுதியை சேர்ந்த விஷ்வா, பெரிய காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த பாபா ,  தாமல் கிராமத்தை சேர்ந்த தமிழரசன் என்கிற வெள்ளை,  தாமஸ் பகுதியை சேர்ந்த யுவராஜ் என்கிற ஊசலான் ஆகிய நால்வரை சிறப்பு தனிப்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News