3 இடங்களில் 84 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் பள்ளி கட்டிடங்களுக்கு அடிக்கல்

கூடுதல் வகுப்பு கட்டிடங்களுக்கான அடிக்கல் வேலூரில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் தொடங்கி வைத்தார்

Update: 2023-02-01 13:15 GMT

பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தாமல் தொடக்கப் பள்ளியில் கூடுதல் வகுப்பு கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில், சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் நித்யா சுகுமார், ஒன்றிய குழு தலைவர் மலர் கொடிகுமார் உள்ளிட்டோர்

காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் சுமார் 84 லட்சம் மதிப்பீட்டில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ்  இரண்டு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான பணியினை தமிழக முதல்வர் ஸ்டாலின் வேலூரில் துவக்கி வைத்ததை தொடர்ந்து, இங்கு  காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி ஆகியோர் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தனர்.

தமிழகம் முழுவதும் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பள்ளிகளில் உட்கட்டமைப்பு மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ளப்படும் எனவும் அதனை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை செயல்படுத்தும் என அறிவிக்கப்பட்டது.

வேலூர் பகுதியில் நடைபெற்ற விழாவில் தமிழக முதலமைச்சர் பல்வேறு இடங்களில் கட்டப்பட உள்ள வகுப்புக் கட்டிடங்களின் துவக்க பணிகளை காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.அவ்வகையில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் தாமல்,  நசரத்பேட்டை மற்றும் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் காலூர் ஆகிய மூன்று இடங்களில் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான இரண்டு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்ட தேர்வு செய்யப்பட்டது.

அவ்வகையில், காஞ்சிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட தாமல் ஊராட்சியில் கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டிடம் கட்டுவதற்கான பணியை கானொளி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து தாமல் கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம் சார்பில் ரூபாய்.28 லட்சம் மதிப்பில் இரண்டு கூடுதல் வகுப்பறைக் கட்டிடம் கட்டுவதற்கான பணியினை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி ஆகியோர் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார்.

இதேபோல் நசரத்பேட்டை தொடக்கப்பள்ளியிலும் நடைபெற்ற விழாவில் சட்டமன்ற உறுப்பினர், மேயர் மகாலட்சுமி யுவராஜ்,  மாமன்ற உறுப்பினர்கள் சந்துரு,  சரவணன் சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள் கலந்து கொண்டு கூடுதல் வகுப்பறை கட்டிட பணிகளை துவக்கி வைத்தனர்.

உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காலூர் கிராம ஊராட்சி பள்ளியிலும் புதிய இரண்டு வகுப்பறை கட்டிடங்களுக்கான பணிகளை ஒன்றிய குழு தலைவர் மலர் கொடி குமார் துணைத் தலைவர் திவ்யப்பிரியா இளமது, மாவட்ட ஊராட்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா,  ஊராட்சி மன்ற தலைவர் சகுந்தலா சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பணிகளை துவக்கி வைத்தனர்.இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் வழங்கிய மனுக்களை பெற்றுக்கொண்டு ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தார்.

கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 2 நாள் பயணமாக இன்று வேலூர் வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.784 கோடி மதிப்பில் 5,351 புதிய வகுப்பறை கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

காட்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் அவர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 196 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு உட்பட்ட 2,381 ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 5,351 புதிய வகுப்பறைகள் கட்டும் திட்டத்தை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இதில், வேலூர் மாவட்டத்தில் ரூ.15.96 கோடி மதிப்பில் 114 வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் திட்டம் அடங்கும்.


Tags:    

Similar News