காஞ்சிபுரத்தில் 1755 பேருக்கு நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கல்

6.4 கோடி நிதி உதவியும், 5.33 கோடி மதிப்பில் தாலிக்கு தங்கம் 1755 பேருக்கு கலெக்டர் மற்றும் எம்எல்ஏவால் வழங்கப்பட்டது.

Update: 2022-01-13 06:30 GMT

காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் 1755 நபர்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது-

தமிழக சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை மூலம் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டமான தாலிக்கு  தங்கம் வழங்கும் விழா இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் ஆட்சியர் மா.ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இதில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர்கள் க.சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர்கொடிகுமார் பங்கேற்று காஞ்சிபுரம் ஒன்றியத்தில் ஐநூத்தி எழுபத்தி மூன்று நபர்களுக்கும்,  குன்றத்தூர் ஒன்றியத்தில் 523 நபர்களுக்கும்,  ஸ்ரீபெரும்புதூரில் 178 நபர்களுக்கும் , உத்தரமேரூரில் 243 நபர்களுக்கும் , வாலாஜாபாத்தில் 228 என மொத்தம் 1755 நபர்களுக்கு வழங்கும் பணியினை இன்று துவக்கி வைத்தனர்.

இதில் பட்டம் பெற்ற 846 நபர்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவியும், 10ஆம் 12ஆம் வகுப்பு முடித்த 909 நபர்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் நிதி உதவி என மொத்தம் 1755 நபர்களுக்கு ரூ 6.485 கோடி நிதி உதவியும் , ரூ5.33 கோடி தங்கமும் பெற்றனர்.

இவ்விழாவில் திமுக நகர செயலாளர் சன் பிராண்ட்ஆறுமுகம் , ஒன்றிய செயலாளர் பி எம் குமார்,  ஒன்றிய பொருளாளர் தசரதன், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் ஜெகநாதன் , நகர அவைத் தலைவர் சந்துரு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News