காஞ்சிபுரம் அருகே தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றிய தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாகரல் கிராமத்தில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு பழங்கள் வழங்கப்பட்டது.

Update: 2024-05-05 09:51 GMT

காஞ்சிபுரம் அருகே மாகரல் கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு பழங்கள் வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் அருகே மாகரல் கிராமத்தில் விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியின் சார்பில் நடைப்பெற்ற தண்ணீர் பந்தல் திறப்பு விழாவில் பொதுமக்கள் மற்றும் பஸ் பயணிகள்,வாகன ஓட்டுநர்களுக்கு பழங்கள், ஜூஸ், மோர் வழங்கப்பட்டது

விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியினர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏழை, எளிய மக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த மாகரல் கிராமத்தில் தமிழக வெற்றி கழகம், காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றியம் சார்பில், ஒன்றிய தலைவர் மாகரல் ஏவிஎம் வினோத் தலைமையில், அன்பு, பிரகாஷ், மாயா, விக்கி ஆகிய தமிழக வெற்றி கழகம் நிர்வாகிகள் ஏற்பாட்டில், தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.


இந்த விழாவில், தமிழக வெற்றிக் கழகத்தின், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் எஸ்.பி.கே தென்னரசு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்கள் மற்றும் பஸ் பயணியர், வாகன ஓட்டிகள் ஆகியோருக்கு பழங்கள், ஜூஸ், மோர் உள்ளிட்டவைகளை வழங்கினார்.

இதேபோல் கடந்த வாரம் ஆர்ப்பாக்கம் மற்றும் கீழ்பெரமல்லூர் பகுதிகளிலும் தண்ணீர் பந்தல் மற்றும் நல தட்ட உதவிகள் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டது.

இதில், காஞ்சிபுரம் மாநகர நிர்வாகி மொய்தீன், உத்திரமேரூர் கிழக்கு ஒன்றிய தலைவர் ரஞ்சித், காஞ்சிபுரம் மாநகர தெற்கு பகுதி நிர்வாகி திருநாவுக்கரசு, காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள், சுகன், சதீஷ், வினோத், தம்மனூர் உதயன் உள்ளிட்ட தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

Tags:    

Similar News