காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆட்சியர் மா.ஆர்த்தி தலைமையில் இன்று விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-05-27 06:30 GMT

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை விவசாய நலன் காக்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி நடைபெறுவது வழக்கம்.

இக்கூட்டத்தில் விவசாயிகளுக்கு‌ நடப்பு பருவ விவசாய ஆலோசனைகள் வேளாண்த்துறை அலுவலர்கள் மூலம் வழங்கப்படும். மேலும் மத்திய மாநில அரசுகளின் விவசாயிகள் நல திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது.

கூட்டம் ஆரம்பித்த நிலையில்,  கடந்த கூட்டத்தில்  விவசாயிகளால் அளிக்கப்பட மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவசாயிகளுக்கு பதில் அளிக்கப்பட்டது.

சில மனுக்கள் மீது உரிய நடவடிக்கை இல்லை என புகார் கூறிய போது விவசாயிகள் அளிக்கும் மனுக்கள் மீது உரிய காலத்தில் ஆய்வு செய்து அதற்கான பதில்களை இனிவரும் காலங்களில் அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அரசு ஊழியர்களுக்குஅ றிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, மாவட்ட வேளாண் துறை அலுவலர்கள், வருவாய் கோட்டாட்சியர் பெ. ராஜலட்சுமி, பொதுப்பணித்துறை , கால்நடைத்துறை, வங்கி துறை அதிகாரிகள் , விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்


Tags:    

Similar News