காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு நற்சான்றிதழ்

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அரசின் நற்சான்றிதழை சுதந்திர தின விழாவில் வழங்கப்படவ உள்ளது.

Update: 2022-08-14 01:25 GMT

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ( பைல் படம்)

காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் அமைந்துள்ளது மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை. இங்கு நாள்தோறும்‌ஆயிரக்கணக்கான புறநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 40வகையான நோய்களுக்கு சிறப்பு அறுவை சிகிச்சை பெற உள்நோயாளிகளாக தங்கி இருந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு வரும் ஏழை எளிய நோயாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் அறிவுறுத்தப்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறந்த முறையில் இத்திட்டத்தை செயல்படுத்தியதற்காக நற்சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

இச் சான்றிதழை நாளை நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் வழங்க உள்ளதாக தெரிய வருகிறது. இவ்விருதினை பெற உழைத்த மருத்துவர்கள் , செவிலியர்கள் , அலுவலக பணியாளர்கள்‌, தனியார் பாதுகாப்பு நிறுவன ஊழியர்கள் , தூய்மை பணியாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது


Tags:    

Similar News