துணை மருத்துவமனைகளில் 145 ஆக்ஸிஜன் படுக்கைகள்- ஆட்சியர் மகேஸ்வரி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள துணை மருத்துவமனைகளில் 145 ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்க உள்ளதாக கலெக்டர் மகேஷ்வரி தெரிவித்தார்.

Update: 2021-05-07 03:30 GMT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு பகுதிகளில் மேற்கொண்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதனை காஞ்சிபுரம் மாவட்ட கொரோனா தடுப்பு சிறப்பு கண்காணிப்பு அதிகாரி முனைவர் சுப்பிரமணியன் குன்றத்தூர்,  ஸ்ரீபெரும்புதூர் , மாங்காடு மற்றும் எழிச்சூர் கேர் சென்டர்களை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி உடன் இன்று ஆய்வு மேற்கொண்டார்

அதன்பின் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான கூட்டம் நடைபெற்றது.இதில் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை அலுவலர்களுக்கு அளித்து பரவலை கட்டுப்படுத்த அறிவுரை வழங்கினர்.

அதன்பின் பேசிய மாவட்ட ஆட்சியர் ,  காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் புதிய கட்டிடத்தில் 350 ஆக்சிஜன் படுக்கைகளும் , மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத் ,  உத்திரமேரூர் , ஸ்ரீபெரும்புதூர் துணை  மருத்துவமனைகளிலும் 145 ஆக்ஸிஜன் படுக்கைகள் விரைவில் வர உள்ளதாகவும் தெரிவித்தார்

மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளை அனுமதிக்க மறுத்தால் சட்டப்படி மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

Tags:    

Similar News