தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ஆய்வு

காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் மாநகராட்சி அலுவலக அலுவலங்களில் டிஎஸ்பி கலைச்செல்வன் குழுவினர் ஆய்வு

Update: 2023-03-15 12:00 GMT

காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் காஞ்சிபுரம் மாவட்ட ஊழல் மற்றும் தடுப்பு கண்காணிப்பு துறை டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்ட போது.

தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பொதுமக்களின் கோப்புகள் தேங்கியுள்ளதாகவும் அதனை சரி செய்ய அதிக அளவில் லஞ்சம் கேட்பதாகவும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குறை கூறிவந்தது.

இந்நிலையில்  தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தற்போதைய அரசு வெளிப்படுத்த தன்மையுடன் நடந்து கொண்டு வருவதாகவும் பொது மக்களின் மனுக்கள் அவர்களின் வாழ்க்கை என்பதை குறிப்பிட்டு அவர்களின் கோரிக்கையை உரிய காலத்திற்குள் நிறைவேற்றி தரவும் இதுகுறித்து காலதாமதம் ஏற்படும் அது குறித்த தகவல்களை உரிய முறையில் அவர்களுக்கு பதில் அளிக்கவும் அறிவுறுத்தி உள்ளார்.

இந்நிலையில் தமிழக முழுவதும் உள்ள பல்வேறு மாவட்ட அரசு அலுவலகங்களில் தமிழக ஊழல் மற்றும் தடுப்பு கண்காணிப்பு துறை அலுவலர்கள் மாலை 3 மணிக்கு திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கலைச்செல்வன் தலைமையில் ஆய்வாளர் நிவாஸ், உதவியாளர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட அலுவலர்கள் குழு காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் மாநகராட்சி அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அறையில் ஆய்வாளர் கீதா தலைமையிலான நாலு பேர் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டு அவர்கள் இடம் இருந்த பணம் அதன் விவரங்களை கேட்டு அறிந்து சரி பார்த்து வருகின்றனர்.

இதேபோல் காஞ்சிபுரம் மாநகராட்சி நகரமைப்பு பிரிவு வருவாய் அலுவலர் பிரிவு ஆதார் மையம் வரி வசூல் மையம் உள்ளிட்ட அலுவலக அறையில் டிஎஸ்பி கலைச்செல்வன் ஆய்வாளர் நிவாஸ் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டு அங்கு உள்ள பணம்  குறித்த தகவல்களைக் கேட்டு அதை கணக்கிட்டு அரசு அலுவலக கோப்பில் மற்றும் கணினியில் பதிவிடப்பட்டுள்ளதா என்றும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

ஆதார் மையப் பிரிவில் உள்ள அலுவலக ஊழியரிடம் இருந்து பணம் மற்றும் அதன் விவரங்கள் கேட்கப்பட்டு அது குறித்த உரிய விளக்கம் அளிக்கவும், அதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு லஞ்ச ஒழிப்புத்துறை கேட்டுள்ளது.இது போல் வரிவசூல் மையத்தில் அப்போதைய நிலவரப்படி வரி செலுத்தியவரிடமிருந்து இருந்து பெறப்பட்ட பணம் குறித்த தகவல்கள் மற்றும் அவர்களது இருப்பு அறையில் வைக்கப்பட்ட பணம் இரண்டையும் தற்போது சரி பார்த்து வருகின்றனர்.

காஞ்சிபுரத்தில் ஒரே நேரத்தில் இரு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டது அலுவலக ஊழியர்களே பெரும் பரப்பரப்பையும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது.இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கேட்டபோது , பணம் இருப்பு குறித்து கேட்டறியப்பட்டு அதற்கான கோப்புகளை ஆராய்ந்து வருவதாகவும் இறுதியில் மட்டுமே அதன் நிலவரம் தெரிய வரும் எனவும் , கூடுதல் பணம் இருப்பின் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.



Tags:    

Similar News