17 வருடங்களுக்கு முன் திருடிச்சென்ற புத்தர் சிலை மீட்க நடவடிக்கை

ஆர்பாக்கம் கிராமத்தில் 1000 ஆண்டு பழமையான சிவன், விஷ்ணு , ஜைன ஆலயங்களும் , புத்தர் சிலை பல நிலைகளில் இருந்து உள்ளது.

Update: 2022-08-13 10:30 GMT

ஆர்ப்பாக்கம் கிராமத்தில் இருந்த புத்தர் சிலை மற்றும் அதற்கான பதிவு கொண்ட புத்தகம்.

காஞ்சிபுரம் அடுத்து 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது ஆர்ப்பாக்கம் கிராமம். இக்கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன், விஷ்ணு , ஜெயின ஆலயங்களும், பௌத்த மதங்களும் இருந்து மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இக்கிராமம் விளங்கியுள்ளது.

இந்நிலையில் இங்குள்ள ஆதி கேசவ பெருமாள் கோவில் வளாகத்தினை ஓட்டி அருகில் உள்ள இடத்தில் அமர்ந்த, நின்ற மற்றும் சிதலமடைந்த மூன்று கிரானைட் புத்தர் சிலைகள் இருந்துள்ளது.

இப்பகுதியை அவ்வப்போது இக்கிராமத்தை சேர்ந்த காலமான புலவர் திரு.ராஜகோபால் என்பவர் பராமரித்தும், இது குறித்த சில நூல்களையும் , தகவல்களையும் வெளியிட்டுள்ளார்.

கடந்த 2005ம் ஆண்டு நின்ற , அமர்ந்த கோலத்தில் இருந்த இரு புத்தர் சிலைகள் மர்ம நபர்களால் திருடி செல்லப்பட்டுள்ளது. இதுகுறித்து மாகரல் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் சில மாதங்கள் விசாரணை நடைபெற்று இவ்வழக்கு கைவிடப்பட்டது.

இந்நிலையில் 2007 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் அமைந்துள்ள ஆசிய நாகரிக அருங்காட்சியகத்தில் இந்த புத்தர் சிலை *நாகப்பட்டினம் புத்தர்* என பெயர் மாற்றம் செய்யப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்ததாகவும், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் இந்த கண்காட்சியை துவக்கி வைத்ததாகவும் கூறப்படுகிறது.

இச்சிலை குறித்து விசாரிக்கும் போது சுபாஷ் கபூர் இச்சிலையை தனது ஆர்ட்ஸ் ஆஃப் பாரஸ்ட் அருங்காட்சியகம் சார்பில் வைக்கப்பட்டுள்ளது என அறிய வந்தது.

மேலும் இதன் விலை இரண்டு மில்லியன் அமெரிக்க டாலர் விலை நிர்ணயக்கபட்டதாக கூறப்பட்டது.

சுபாஷ் கபூர் மீது சட்டவிரோத பழங்கால பொருட்களை கடத்திய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் என்பதால் இந்த புத்தர் சிலை குறித்து விசாரணை தொடங்கிய போது எந்த வித புகாரும் மற்றும் ஆதாரமும் கிடைக்காததால் புத்தர் சிலை மீட்பது இந்திய அதிகாரிகளால் தடைப்பட்டது.

இந்நிலையில் சமூக ஆர்வலரும் இந்தியா பிரைவேட் இணை நிறுவனமான விஜயகுமார் என்பவர் இது குறித்து தேடல்களை முற்பட்ட போது ஆர்ப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ராஜகோபால் என்பவர் எழுதிய *அறிஞர் பார்வையில் பௌத்தம்* எனும் நூலில் இந்த புத்தர் சிலை படம் கண்டதை தொடர்ந்து இது தொடர்பான ஆதாரங்களை திரட்டி வந்து இது குறித்து தெரிவித்துள்ளார்.

மேலும் 2002இல் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் காஞ்சிபுரம் சுற்றியுள்ள கோயில்கள் குறித்த *பயணியர் வழிகாட்டி* எனும் புத்தகத்தில் ஆர்ப்பாக்கம் ஜெயினர் ஆலய குறித்த விளக்க உரையில் இங்கு புத்தர் சிலை உள்ளது என்பது பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் இது குறித்து உள்நாட்டு பாதுகாப்பு பிரிவிடம் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் , இதுகுறித்த கூடுதல் விவரங்கள் ஆதாரங்களை பெற்று சிலை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

கிராமத்தில் இருந்த தொன்மை வாய்ந்த புத்தர் சிலையை அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியானதால் அக்கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதும் , விரைவில் மீட்டு தங்கள் கிராமத்தில் இதை வைக்க வேண்டும் எனவும் தொல்லியல் துறை இப்பகுதியை ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

Tags:    

Similar News