திம்பம் மலைப்பாதையில் மரம் பாரம் ஏற்றி சென்று கொண்டிருந்த லாரி கவிழ்ந்து விபத்து..!
ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பாதையில் சத்தியமங்கலம் நோக்கி மரம் பாரம் ஏற்றி சென்று கொண்டிருந்த லாரி 13வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும் போது அதிக பாரம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.;
ஈரோடு : திம்பம் மலைப்பாதையில் சத்தியமங்கலம் நோக்கி மரம் பாரம் ஏற்றி சென்று கொண்டிருந்த லாரி 13வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும் போது அதிக பாரம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் ஓட்டுநர் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
தற்போது திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. திம்பம் மலைப்பாதையில் தினந்தோறும் அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாவது தொடர் கதையாகி வரும் நிலையில், தினந்தோறும் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆசனூர் காவல்துறையினர் லாரியை மீட்கும் பணியிலும் போக்குவரத்தை சீர் செய்யும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.