ஈரோடு மாவட்டத்தில் 36 இடங்களில் முதல்வர் மருந்தகம் அமைக்கும் பணி தீவிரம்

ஈரோடு மாவட்டம் நசியனூரில் கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் முதல்வர் மருந்தகத்தினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (பிப்.15) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.;

Update: 2025-02-15 11:30 GMT

நசியனூர் கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் முதல்வர் மருந்தகப் பணியினை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்ட போது எடுத்த படம்.

நசியனூரில் கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் முதல்வர் மருந்தகத்தினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (பிப்.15) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் ஜெனிரிக் மருந்துகளும், பிற மருந்துகளும் கிடைக்கும் வகையில் முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார்.

அதன்படி, வரும் 24ம் தேதி தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் முதல்வர் மருந்தகங்களை தொடங்கி வைக்கப்படவுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 22 இடங்களிலும், தனிநபர் மூலம் நேரடியாக 14 இடங்களிலும் என மொத்தம் 36 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் துவக்கி வைக்கப்படவுள்ளது.


முதல்வர் மருந்தகம் அமைக்க பி.பார்ம் மற்றும் டி.பார்ம் படித்தவர்கள் நேரடியாகவும் மற்றும் கூட்டுறவுத்துறையின் மூலமாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. தொழில் முனைவோர்களாக நேரடியாக முதல்வர் மருந்தகம் அமைப்பவர்களுக்கு மானியமாக தமிழ்நாடு அரசு ரூ.3 லட்சம் இரண்டு தவனணைகளாக ரொக்கமாகவும், மருந்துகளாகவும் வழங்க உள்ளது.

அந்த வகையில், ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கோபிசெட்டிபாளையம், புன்செய்புளியம்பட்டி, பவானி, பெருந்துறை, சத்தியமங்கலம், மொடக்குறிச்சி, கவுந்தப்பாடி, காஞ்சிகோவில், நசியனூர், அரியப்பம்பாளையம் உள்ளிட்ட 36 இடங்களில் துவக்கி வைக்கப்படவுள்ளது.

 தமிழ்நாடு முதலமைச்சரால் துவக்கி வைக்கப்படவுள்ள நசியனூர் கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும், முதல்வர் மருந்தகத்தினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (பிப்.15) நேரில் சென்று பார்வையிட்டார். மேலும், முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

Tags:    

Similar News