முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஈரோடு கிழக்கு எம்எல்ஏவாக பதவியேற்றார் வி.சி.சந்திரகுமார்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற வி.சி.சந்திரகுமார், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் எம்எல்ஏவாக இன்று (பிப்.10) காலையில் பதவியேற்றுக் கொண்டார்.;
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக பதவியேற்ற சந்திரகுமார் முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற போது எடுத்த படம்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற வி.சி.சந்திரகுமார், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் எம்எல்ஏவாக இன்று (பிப்.10) காலையில் பதவியேற்றுக் கொண்டார்.
ஈரோடு கிழக்கு தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் 14ம் தேதி உடல் நலக்குறைவால் மறைந்தார். இதையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, கடந்த பிப்ரவரி 5ம் தேதி தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் (8ம் தேதி) வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், திமுக சார்பில் போட்டியிட்ட வி.சி.சந்திரகுமார் வெற்றி பெற்றார். இதையடுத்து, அவர் சென்னை வந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகளிடம் வாழ்த்துப் பெற்றார்.
இதனையடுத்து, இன்று (பிப்ரவரி 10ம் தேதி) காலை அவர் எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில், சட்டபேரவை தலைவர் அப்பாவு தலைமையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், எவ.வேலு, கே.என்.நேரு, சு.முத்துசாமி உள்ளிட்டோர் முன்னிலையில் வி.சி.சந்திரகுமார் உறுதிமொழி எடுத்து எம்எல்ஏவாக பதவியேற்றார்.