புதிய தொழிற்பள்ளிகள் தொடங்க மற்றும் புதுப்பிக்க வரும் பிப்.28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
நடப்பு 2025-26ம் கல்வியாண்டில் புதிய தொழிற்பள்ளிகள் தொடங்கவும், அங்கீகாரத்தை புதுப்பிக்கவும், தொழிற்பள்ளிகளில் புதிய பிரிவுகள் தொடங்கவும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.;
ஈரோடு : நடப்பு 2025-26ம் கல்வியாண்டில் புதிய தொழிற்பள்ளிகள் தொடங்கவும், அங்கீகாரத்தை புதுப்பிக்கவும், தொழிற்பள்ளிகளில் புதிய பிரிவுகள் தொடங்கவும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
புதிய தொழிற்பள்ளிக்கு விண்ணப்பித்தல் மற்றும் புதுப்பித்தல் உள்ளிட்ட அனைத்து வகைக்கும் ஒரே ஒரு விண்ணப்பத்தின் மூலமாகவே www.skiilltraining.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்
இதற்கான விண்ணப்பக்கட்டணம், ஆய்வுக்கட்டணம் ஆகிவற்றையும் வங்கியின் பணப் பரிவர்த்தனை முறைகள் மூலமாகவே மேற்கொள்ளவேண்டும்.அனைத்து பிரிவுகளுக்கும் சேர்த்து விண்ணப்பக் கட்டணமாக ரூ. 5 ஆயிரம், ஆய்வுக் கட்டணம் ரூ. 8 ஆயிரம் எனும் அளவில் செலுத்த வேண்டும்.
கடைசி நாள்
விண்ணப்பித்தலுக்கான கடைசி நாள் வரும் 28ம் தேதி ஆகும் என கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.