ஈரோடு கலை & அறிவியல் கல்லூரியில் போட்டி – ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை வென்ற வேளாளர் கல்லூரி!
ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறை சார்பில் நடந்த கல்லூரிகளுக்கு இடையேயான போட்டியில், ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை வேளாளர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பெற்றுள்ளது.;
ஈரோடு : ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறை சார்பில் கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகள் நடைபெற்றன.இதில் 900-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
போட்டிகளின் வகைகள்
ஆய்வுக்கட்டுரை சமர்பித்தல், விளக்கக்காட்சிப் படம், சந்தைப்படுத்தல், வலை வடிவமைப்பு, குறும்படம், விநாடி வினா, புகைப்படம் எடுத்தல், தனிநடனம் மற்றும் குழு நடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.தி முதலியார் எஜுகேஷனல் டிரஸ்ட்டின் தலைவர் எ. ராஜமாணிக்கம் தலைமை வகித்தார்.
கல்லூரி செயலர் மற்றும் தாளாளர் மு. மு. பாலுசாமி, கணினித்துறை தலைவர் ரிஸ்வானர், கல்லூரி முதல்வர் சு. சங்கரசுப்பிரமணியன், இயக்குநர் வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்புரையாளர்
எஸ். எஸ். எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் மற்றும் உதவிப்பேராசிரியர் சங்கரராமன் சிறப்புரை நிகழ்த்தினார்.பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம், ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை வேளாளர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் பெற்றனர்.கணினித் துறைத்தலைவர் ம. மேனகர் நன்றி கூறினார்.