ஒலகடம் அருகே சட்டவிரோதமாக ஏரியிலிருந்து மண் திருட்டு..!
ஒலகடம் அருகே சட்டவிரோதமாக ஏரியிலிருந்து மண் எடுக்கப்பட்டது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.;
ஈரோடு : ஒலகடம் அருகே சட்டவிரோதமாக ஏரியிலிருந்து மண் எடுக்கப்பட்டது . உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஒலகடம் பேரூராட்சிப் பகுதியில் ராஜகுமாரனூா் ஏரி உள்ளது. இந்த ஏரியிலிருந்து கடந்த இரு நாள்களாக பொக்லைன் உதவியுடன் மண் வெட்டி எடுக்கப்பட்டு, டிப்பா் லாரிகள் மூலம் கடத்திச் செல்லப்பட்டது.
பொதுமக்கள் புகாா்
இதுகுறித்து, அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு புகாா் தெரிவித்தனா். மேலும், சமூக வலைதளங்களிலும் மண் திருட்டு தொடா்பான தகவல்கள் வெளியாயின.
சட்டத்துக்கு புறம்பாக ஏரியிலிருந்து மண் எடுக்கப்பட்டது தொடா்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.