ஈரோடு மணல்மேடு வீதியில் காசநோய் இல்லா ஈரோடு இயக்க விழிப்புணர்வு முகாம்

ஈரோடு மணல்மேடு வீதியில் காசநோய் இல்லா ஈரோடு இயக்க விழிப்புணர்வு முகாம் இன்று (டிச.13) நடைபெற்றது.;

Update: 2024-12-13 11:30 GMT

ஈரோடு மாநகராட்சி 51வது வார்டு பகுதியில் மணல்மேடு வீதியில் நடைபெற்ற காசநோய் இல்லா ஈரோடு இயக்க விழிப்புணர்வு முகாமில் எடுக்கப்பட்ட படம்.

ஈரோடு மணல்மேடு வீதியில் காசநோய் இல்லா ஈரோடு இயக்க விழிப்புணர்வு முகாம் இன்று (டிச.13) நடைபெற்றது.

ஈரோடு மாநகராட்சி காந்திஜி ரோடு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய பகுதிக்கு உட்பட்ட 51வது வார்டு பகுதியில் மணல்மேடு வீதியில் காசநோய் இல்லா ஈரோடு இயக்க விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட துணை இயக்குநர் காசநோய் மருத்துவ பணிகள் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலரின் ஆலோசனையின்படி, நடைபெற்ற வரும் இந்த காச நோய் இல்லா ஈரோடு இயக்க விழிப்புணர்வு முகாமில் காசநோய் பரவும் விதம், நுரையீரல் காச நோயின் அறிகுறிகள் அதன் பாதிப்புகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.


தொடர்ந்து, காச நோய்க்கான இலவச பரிசோதனை மற்றும் சிகிச்சை கிடைக்கும் இடங்கள், நடமாடும் எக்ஸ்ரே ஊர்தியின் பயன்கள், காச நோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியவர்கள், காச நோய் இல்லா ஈரோடு இயக்கத்தின் நோக்கமும் பயன்களும், காசநோய் ஒழிப்பில் பொதுமக்களின் பங்கு குறித்து சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டது.

இந்த முகாமில் ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் காச நோய் மருத்துவப் பணிகள் அலுவலக மாவட்ட நலக் கல்வியாளர் சிவகுமார், காசநோய் சுகாதார பார்வையாளர் ஜெகன், நடமாடும் எக்ஸ்ரே ஊர்தி குழுவினர், மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பெண் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் 60 பேர்கள் கலந்து கொண்டனர்.


மேலும், இந்த முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு காச நோய் கண்டறியும் மார்பக ஊடுகதிர் பரிசோதனை, சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, காசநோய் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

Tags:    

Similar News