இருளில் இருக்கும் சாலை, இருட்டில் மக்கள் துயரம்
சாலையில் மின் விளக்குகள் இல்லததால் வாகன ஓட்டிகள் சிரமம்;
கண் சிமிட்டும் மின்விளக்கு: வாகன ஓட்டிகள் திக்... திக்
பனமரத்துப்பட்டி: சேலம் - பனமரத்துப்பட்டி சாலையில் ஏரி சாலை பஸ் ஸ்டாப் உள்ளது. அங்கிருந்து பிரியும் அடிக்கரை சாலையில், பனமரத்துப்பட்டி காவல் நிலையம் அமைந்துள்ளது. அடிக்கரை திரும்பும் சாலையில் இரு மின்கம்பங்களில் உள்ள விளக்குகள், ஒரு மாதமாக எரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காவல் நிலையம் அருகே உள்ள மற்றொரு கம்பத்தில், மின் விளக்கு கண் சிமிட்டியபடி உள்ளது.
இதனால் இரவில் அச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், திக்... திக்... அச்சத்துடன் பயணிக்கின்றனர். அசம்பாவிதம் ஏற்படும் முன், விளக்குகளைச் சரிசெய்து எரிய வைக்க, பனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களிடமிருந்து எழுந்துள்ளது.