ஈரோடு மாவட்டத்தில் ஹஜ் புனித யாத்திரை செல்பவர்களுக்கு 26ம் தேதி தடுப்பூசி முகாம்!

ஈரோடு மாவட்டத்தில் ஹஜ் புனித யாத்திரை செல்பவர்களுக்கு தடுப்பூசி முகாம் வருகிற 26ம் தேதி நடக்கிறது.;

Update: 2025-04-23 05:10 GMT

ஈரோடு மாவட்டத்தில் ஹஜ் புனித யாத்திரை செல்பவர்களுக்கு தடுப்பூசி முகாம் வருகிற 26ம் தேதி நடக்கிறது.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் ஹஜ் புனித யாத்திரை செல்பவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் தடுப்பூசி போடப்பட உள்ளது. இதற்கான சிறப்பு முகாம் வருகிற 26ம் தேதி (சனிக்கிழமை) மாவட்ட சுகாதார அலுவலகத்தில் நடக்கிறது.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஹஜ் புனித யாத்திரை செல்லும் ஆண்கள், பெண்கள் என 95 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு, சொட்டு மருந்து வழங்கப்படும். 65 வயதுக்கு மேற்பட்ட 7 பேருக்கு பிரத்தியேக தடுப்பூசி போடப்படும்.

சர்க்கரை பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோ தனை ஆகியவையும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Similar News